செய்திகள்

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி

DIN

இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

முதல் இரு ஆட்டங்களில் தோற்று தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் ஆறுதல் தேடிக்கொண்டது.
அடிலெய்டில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் மைக்கேல் கிளிங்கர் 43 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62, ஆரோன் ஃபிஞ்ச் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 53, டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்தனர்.
இலங்கைத் தரப்பில் மலிங்கா, ஷனகா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முனவீரா 37, சிறிவர்த்தனா 35 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஜேம்ஸ் ஃபாக்னர், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆடம் ஸம்பா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். குணரத்னே தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
முதல் இரு போட்டிகளில் வென்றதன் அடிப்படையில் இலங்கை 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT