செய்திகள்

ஏலத்துக்கு வரும் இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கம்

DIN

ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஏலத்துக்கு வருகிறது.
கடந்த 1952-ஆம் ஆண்டு ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் காஷாபா ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். கடந்த 1984-ஆம் ஆண்டு அவர் காலமான நிலையில், அவரது பெயரில் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் மல்யுத்த அகாதெமி அமைக்கப்படும் என்று 2009-ஆம் ஆண்டில் அப்போதைய மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் திலிப் தேஷ்முக் அறிவித்திருந்தார்.
2013-ஆம் ஆண்டில் அந்தப் பணிகளுக்காக ரூ.1.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், உரிய பணிகள் நடைபெறவில்லை எனக் கூறும் அவரது மகன் ரஞ்சித் ஜாதவ், கட்டுமானப் பணிகளுக்கான நிதி திரட்டுவதற்காக தனது தந்தை வென்ற பதக்கத்தை ஏலத்தில் விடுவதாக கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT