செய்திகள்

பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்குமா டெல்லி? குஜராத்துடன் இன்று மோதல்

தில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் ஐபில் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸும், குஜராத் லயன்ஸும் மோதுகின்றன

DIN

தில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் ஐபில் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸும், குஜராத் லயன்ஸும் மோதுகின்றன.
இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லி அணி, இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் குஜராத்தை சந்திக்கிறது. தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்திருந்த டெல்லி அணி, கடந்த ஆட்டத்தில் ஹைதராபாதை வீழ்த்தியதன் மூலம் நம்பிக்கை பெற்றுள்ளது. ஆனால் குஜராத் அணியோ ஏற்கெனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டதால், இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.
இதுவரை...: இவ்விரு அணிகளும் இதுவரை இரு ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.
போட்டி நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT