செய்திகள்

அனைத்து ஐபிஎல்களிலும் முத்திரை பதித்த 'சூப்பர் ஸ்டார்’ சுரேஷ் ரெய்னா!

இதுவரையிலான 10 ஐபிஎல்-களிலும் முத்திரை பதித்துள்ளார். 8 முறை 400 ரன்களுக்கு...

சநகன்

ஐபிஎல் போட்டியின் சூப்பர் ஸ்டார் என்றால் அவர் ஒருவர்தான். சுரேஷ் ரெய்னா. 

இதுவரையிலான 10 ஐபிஎல்-களிலும் அவர் முத்திரை பதித்துள்ளார். 8 முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இருமுறை 374, 399 ரன்கள் எடுத்தார். சமீபத்தில் அவர் ஐபிஎல்-லில் 4500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெயரைத் தட்டியுள்ளார். இதற்கு முன் ஐபிஎல்-லின் முதல் 1500 ரன்கள், 2000 ரன்கள், 2500 ரன்கள், 3000 ரன்கள், 3500 ரன்கள் எடுத்தவரும் ரெய்னாதான்.

ரெய்னா இதுவரையிலான ஐபிஎல் போட்டிகளில் எடுத்த ரன்கள்:

2008 - 421
2009 - 434
2010 - 520
2011 - 438
2012 - 441
2013 - 548
2014 - 523
2015 - 374
2016 - 399
2017 - 434*

ரெய்னாவுக்கு அடுத்த சிறந்த பேட்ஸ்மேன் என ரோஹித் சர்மாவைச் சொல்லலாம். ரெய்னா 8 முறை 400 ரன்களைக் கடந்தார் என்றால் அவர் 6 முறை அந்த இலக்கைத் தாண்டியுள்ளார். கம்பீரும் வார்னரும் 5 முறை 400 ரன்களுக்கு அதிகமாக எடுத்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT