செய்திகள்

பாகிஸ்தான் தொடர் குறித்து அரசுக்கு நினைவுபடுத்தினோம்: பிசிசிஐ

DIN

பாகிஸ்தானுடனான இரு தரப்பு கிரிக்கெட் தொடர் குறித்து மத்திய அரசுக்கு 15 நாள்களுக்கு முன்பு நினைவுபடுத்தியதாக பிசிசிஐ வியாழக்கிழமை கூறியது.
இதுகுறித்து, பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடர் குறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம்.
இந்நிலையில், அதுகுறித்து கடந்த 15 நாள்களுக்கு முன்பு அரசுக்கு நினைவுபடுத்தியுள்ளோம். இதுவரை எந்த பதிலும் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் விளையாடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து இருதரப்பு கிரிக்கெட் வாரியமும் இந்த மாத இறுதியில் துபையில் கூடி கலந்தாலோசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT