செய்திகள்

ரியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் நூஸ்மான் கைது 

DIN

கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி ரியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கார்லோஸ் நூஸ்மானை (75) பிரேசில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரேசில் நீதிமன்ற உத்தரவின்பேரில் நூஸ்மான் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதவிர ரியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைமைச் செயல் அதிகாரி லியோனார்டோ கிரைனரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நூஸ்மானின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ள போலீஸார், அவர் மீது ஊழல், பணமோசடி மற்றும் கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். நூஸ்மான் தற்போது வடக்கு ரியோவில் உள்ள பெனிஃபிகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
1995 முதல் பிரேசில் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்து வந்த நூஸ்மானின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 457 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் நிதி ஆதாரத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் குற்றம்சாட்டியுள்ளார். நூஸ்மான், கிரனைருக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்துகளை முடக்க வேண்டும் என்றும் அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT