செய்திகள்

டென்மார்க் ஓபன் இன்று தொடக்கம்: சிந்து, சாய்னா களமிறங்குகிறார்கள்

DIN

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இதில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.
ஜப்பான் ஓபனில் ஆரம்பத்திலேயே வெளியேறிய சிந்து, இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார். போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் அவர் தனது முதல் சுற்றில் உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூஃபெய்யை சந்திக்கிறார். 
இந்த போட்டியின் டிராவைப் பொறுத்தவரையில் சிந்துவும், போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் ஹீ பிங்ஜியாவோவும் அரையிறுதியில் மோத வாய்ப்புள்ளது. சிந்துவும், பிங்ஜியாவோவும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சிந்து 4 முறையும், பிங்ஜியாவோ 5 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 
மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால், 16 மாதங்களுக்குப் பிறகு சூப்பர் சீரிஸ் போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார். போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா, தனது முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கரோலினா மரினை சந்திக்கிறார். ஜப்பான் ஓபனில் 2-ஆவது சுற்றில் கரோலினாவிடம் தோற்றார் சாய்னா. இந்த முறை அதற்கு சாய்னா பதிலடி கொடுப்பாரா, இல்லை கரோலினாவின் ஆதிக்கம் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடர்ச்சியாக 3 சூப்பர் சீரிஸ் இறுதிச் சுற்றுகளில் விளையாடி, அதில் இரு பட்டங்களை வென்ற நிலையில், இப்போது ஜப்பான் ஓபனில் களமிறங்குகிறார் ஸ்ரீகாந்த். 
முதல் சுற்றில் சகநாட்டவரான சமீர் வர்மாவை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த். காலிறுதியில் ஸ்ரீகாந்தும், டென்மார்க்கின் முன்னணி வீரரான விக்டர் ஆக்ùஸல்சனும் மோத வாய்ப்புள்ளது. மற்றொரு இந்தியரான சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் டென்மார்க்கின் கிறிஸ்டியானையும், அஜய் ஜெயராம் தனது முதல் சுற்றில் சீனாவின் லின் டானையும் சந்திக்க வாய்ப்புள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT