செய்திகள்

2019 உலகக் கோப்பை: இலங்கை அணி நேரடித் தகுதி!

எழில்

2019 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் 8 அணிகளில் ஒன்றாக இலங்கை அணி இடம்பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை அணி 2019 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

செப்டம்பர் 30 வரையிலான காலக்கெடுவுக்குள் மே.இ. தீவுகள் அணியால் (78 புள்ளிகள்) இலங்கையின் 86 புள்ளிகளைத் தாண்டமுடியாத நிலையில், இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4-0 அல்லது 5-0 என்கிற கணக்கில் ஜெயித்தால் மட்டுமே மே.இ. தீவுகள் அணியால் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறமுடியும் என்கிற நிலைமையில் நேற்றைய தோல்வி அதன்
திட்டங்களை முறியடித்துள்ளது. மேலும் அந்தத் தோல்வி இலங்கை அணிக்குச் சாதகமாகவும் அமைந்துவிட்டது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை என 8 அணிகள் 2019 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. இந்தப் போட்டி 2019 மே 30 அன்று தொடங்கி ஜூலை 15 அன்று முடிவடைகிறது.

2018-ல் மே.இ. அணிகள், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றன. அதிலிருந்து 2 அணிகள் உலகக் கோப்பைப் போட்டிக்குக் கூடுதலாகத் தேர்வாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT