செய்திகள்

இலங்கை 282-க்கு ஆல் அவுட்

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 84 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து, இலங்கையை விட 29 ரன்கள் முன்னிலையில் உள்ளது. டாம் லதாம் 121, ராஸ் டெய்லர் 50 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த இலங்கை முதல் நாளான சனிக்கிழமை முடிவில் 87 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்திருந்தது. நிரோஷன் டிக்வெல்லா 73 ரன்களுடனும், லாஹிரு குமரா ரன்கள் இன்றியும் 2-ஆம் நாள் ஆட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர்.
இதில் லாஹிரு டக் அவுட்டாக, இலங்கை இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. டிக்வெல்லா 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி 6, நீல் வாக்னர் 2, போல்ட், கிராண்ட்ஹோம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது. ஜீத் ராவல் 43, கேப்டன் கேன் வில்லியம்சன் 91 ரன்களுக்கு ஆட்டமிழக்க, லதாம்-டெய்லர் கூட்டணி விளையாடி வருகிறது. இலங்கை தரப்பில் லாஹிரு, தனஞ்ஜெயா தலா ஒரு விக்கெட் சாய்த்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT