செய்திகள்

பெர்த் டெஸ்ட்: இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

DIN

2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் சதத்தால், 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  

இதன்படி, 43 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-ஆவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில்,  48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது. இந்த நிலையில், இன்று 4-ஆவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது.  அந்த அணியின் உஸ்மான் காவ்ஜா 72 ரன்கள்,  டிம் பெய்ன் 37 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 93.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 6, பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2-ஆவது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது. தற்போது வரை இந்திய அணி 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

இரு அணிகளுக்கும் வெற்றி பெற சம வாய்ப்பு உள்ளதால், இந்த டெஸ்ட் போட்டியும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

SCROLL FOR NEXT