இந்த வருடம் எங்கள் குழந்தையை எதிர்பார்க்கவுள்ளோம். புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா.
புஜாரா - பூஜா பாபரி ஆகிய இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் தற்போது தான் தந்தையாகப் போவதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் புஜாரா.
இத்துடன் கர்ப்பமாக உள்ள தனது மனைவியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் புகைப்படத்தில் டாடி என்று தனக்கும் மனைவிக்குத் தாயாகப் போகிறவர் என்றும் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.