செய்திகள்

அரபு நாடுகளின் சிறந்த கால்பந்து வீரராக முகமது சாலா தேர்வு

DIN

அரபு நாடுகளின் 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக எகிப்து கால்பந்து அணியின் முகமது சாலா (25) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அரபு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்கள் சுமார் 100 பேரால் இவர் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் லிவர்பூல் எஃப்சி கிளப் அணியிலும் இவர் விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் 17 கோல்களை அடித்துள்ள முகமது சாலா, அனைத்து போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 23 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.
ரஷியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் எகிப்து அணி தேர்வானதில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
சிரிய வீரரான ஒமர் கிரிபின் இரண்டாவது இடத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரர் ஒமர் அல் சோமோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT