செய்திகள்

ஷென்ஸென்  ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஷரபோவா

DIN

சீனாவில் நடைபெற்றுவரும் ஷென்ஸென்  ஓபன் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் மரியா ஷரபோவா, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக, சீனாவின் ஷென்ஸென்  நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் அலிசனிடம் இழந்தார் ஷரபோவா.
எனினும், அடுத்த 2 செட்களிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-3, 6-2 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார் ஷரபோவா.
5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஷரபோவா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்றைய ஆட்டம் போல் எப்போது விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த ஆட்டத்தில் மிக எளிதில் வெற்றி அடைந்தேன். ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி வரவுள்ள நிலையில், இதுபோன்ற போட்டிகள் மூலம் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்று கருதுகிறேன். நான் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டேன். இந்த ஆட்டத்தில் அலிசன் சிறப்பாக விளையாடினார் என்றார் ஷரபோவா. வியாழக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் ஜெரீனா தியாஸை அவர் எதிர்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT