இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியில் இரு வேகப்பந்து வீச்சாளர்கள் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள். டுயன் ஆலிவியர், லங்கி நிஜிடி என இரு இளம் வேகப்பந்துவீச்சாளர்களும் ஸ்டெய்னுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆலிவியர் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். நிஜிடி ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்துவீச்சின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளன்று தெ.ஆ. வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெய்னுக்குக் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார் ஸ்டெய்ன். அவர்களுடைய அறிவுரையின் பேரில் ஸ்டெய்ன் இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஜனவரி 13 செஞ்சுரியனில் அன்று 2-வது டெஸ்ட் தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.