செய்திகள்

செய்யது முஷ்டாக் அலி டி20: தில்லி வெற்றி

தினமணி

செய்யது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் சுற்றில் தில்லி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழகத்தை வென்றது.
 கொல்கத்தாவில் நடைபெற்ற "பி' பிரிவு ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த தமிழகம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.
 அதிகபட்சமாக கேப்டன் விஜய் சங்கர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாபா அபராஜித் 45 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் பரத் சங்கர் 24, உடன் வந்த வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களில் வெளியேறினர். சஞ்சய் யாதவ், முகமது ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, கங்கா ஸ்ரீதர், ஜெகதீசன் டக் அவுட் ஆகினர்.
 தில்லி தரப்பில் கெஜ்ரோலியா 4, சங்வான், லலித் யாதவ், சுபோத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய தில்லி 15.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் கம்பீர் 21 ரன்கள் அடிக்க, ரிஷப் பந்த் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 துருவ் ஷோரே-நிதீஷ் ராணா இணை அணியை வெற்றிக்கு வழிநடத்தியது இதில் துருவ் 28, ராணா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். தமிழகம் தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 23-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தை சந்திக்கிறது.
 பஞ்சாப் வெற்றி: இதனிடையே, "ஏ' பிரிவு ஆட்டத்தில் கர்நாடகம்-பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கர்நாடகம் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பஞ்சாப் 9 விக்கெட் இழப்புக்கு அதே ரன்கள் எடுத்ததால் ஆட்டம் "டை' ஆனது. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஒரு ஓவர் ஆட்டத்தில் பஞ்சாப் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT