கோப்புப்படம் 
செய்திகள்

உலகக்கோப்பை சேலஞ்ச் ஜிம்னாஸ்டிக்ஸ்: தங்கம் வென்றார் தீபா கர்மாகர்

இரண்டு ஆண்டுகள் காயத்தால் அவதிப்பட்டு மீண்ட நிலையில் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பையில் இந்தியாவின் தீபா கர்மாகர் தங்கப் பதக்கம் வென்றார்.

தினமணி செய்திச் சேவை

இரண்டு ஆண்டுகள் காயத்தால் அவதிப்பட்டு மீண்ட நிலையில் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பையில் இந்தியாவின் தீபா கர்மாகர் தங்கப் பதக்கம் வென்றார் .

துருக்கி, மொ்ஸின் நகரில் எப்ஐஜி ஆா்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை சேலஞ்ச் போட்டிகள் நடந்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வால்ட் பிரிவில் 14.150 புள்ளிகள் குவித்து இந்தியாவின் தீபா கர்மாகர் தங்கம் வென்றார். மேலும் அவா் 13.400 புள்ளிகளுடன் தகுதிப் பிரிவிலும் முதலிடம் பெற்றார்.

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் தீபா 4-ஆம் இடம் பெற்றிருந்தார். பின்னர் கடும் முதுகுவலி, காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த தீபா, கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க விரும்பினார். ஆனால் தொடர் சிகிச்சை காரணமாக அவர் அதில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் உலகக்கோப்பை சேலஞ்ச் போட்டியில் அவர் தங்கம் வென்று தனது திறனை மீண்டும் நிரூபித்துள்ளார். மேலும் அவர் ஜகார்த்தா ஆசியப் போட்டியில் பங்கேற்க உள்ள 10 பேர் கொண்ட இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT