செய்திகள்

ஐசிசி தரவரிசையில் பெரும் சரிவைச் சந்தித்தது ஆஸ்திரேலியா!

Raghavendran

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா, 34 வருடத்தில் இல்லாத பெரும் சரிவை தற்போது சந்தித்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவை ஆஸ்திரேலிய அணி கண்டுள்ளது. திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் 6-ஆம் இடத்துக்கு சரிந்தது. முன்னதாக, 1984-ஆம் ஆண்டு கடைசியாக 6-ஆவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலக சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலியா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி முதலிடத்தில் இருந்தது. பின்னர் நடைபெற்ற 15 ஒருநாள் போட்டிகளில் 13-ல் தோல்வியைத் தழுவியுள்ளது.

அதிலும் குறிப்பாக நியூஸிலாந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடனான தொடர்களை இழந்தது. மேலும் சாம்பியன்ஸ் டிராஃபியிலும் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

5 முறை உலக சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ள இந்த பெரும் பின்னடைவு அந்த அணியின் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஐசிசி ஒருநாள் தரவரிசை பின்வருமாறு:

அணிதரவரிசைபுள்ளிகள்
இங்கிலாந்து1124
இந்தியா2122
தென் ஆப்பிரிக்கா3113
நியூஸிலாந்து4112
பாகிஸ்தான்5102
ஆஸ்திரேலியா6102
வங்கதேசம்793
இலங்கை877
மேற்கிந்திய தீவுகள்969
ஆப்கானிஸ்தான்1063

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT