செய்திகள்

இந்தச் சிறுவன் எங்கே உள்ளான்?: வாசிம் அக்ரமை ஆச்சர்யப்படுத்திய சிறுவனின் பந்துவீச்சு! (விடியோ)

இந்தச் சிறுவன் எங்கே உள்ளான்? எங்கள் நாட்டில் அற்புதமான திறமைகளைக் கொண்டவர்கள் உள்ளார்கள்...

எழில்

அந்தச் சிறுவனுக்கு அதிகபட்சமாக 10 முதல் 12 வயது இருக்கலாம். அவன் முகம் கூட காணொளியில் சரியாகப் பதிவாகவில்லை. ஆனால் இன்று புகழ்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரமின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டான். 

ட்விட்டரில் வாசிம் அக்ரம் போல பந்துவீசும் சிறுவனின் பந்துவீச்சு காணொளியை ஒருவர் பகிர்ந்து அதை அக்ரமுக்கும் டேக் செய்திருந்தார். அதில், சிறுவன் ஒருவன் மிக நேர்த்தியாக ஸ்டம்பைக் குறி பார்த்து வீசும் காட்சிகள் இருந்தன. 

இந்த ட்வீட்டுக்கு ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் பதில் அளித்தது மட்டுமல்லாமல் அந்த காணொளியைப் பகிர்ந்து அச்சிறுவனை கிரிக்கெட் உலகுக்கு அறிமுகப்படுத்திவிட்டார் வாசிம் அக்ரம். 

இந்தச் சிறுவன் எங்கே உள்ளான்? எங்கள் நாட்டில் அற்புதமான திறமைகளைக் கொண்டவர்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களைக் கண்டுபிடித்து வளர்த்தெடுக்க சரியான வழிமுறைகள் கிடையாது. இதுகுறித்து நாங்கள் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். எங்கள் இளைஞர்களிடம் கிரிக்கெட்டின் வருங்காலம் உள்ளது என்று ட்வீட் செய்துள்ளார் அக்ரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT