செய்திகள்

தென் ஆப்பிரிக்கா 311

தினமணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 97.5 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
 அடுத்து ஆடிவரும் ஆஸ்திரேலியா, 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 67 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது.
 கைவசம் ஒரு விக்கெட் உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட அந்த அணி 66 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. டிம் பெய்ன் 33, ஹேஸில்வுட் ஒரு ரன்னுடன் ஆடி வருகின்றனர்.
 முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல்நாள் முடிவில் 266 ரன்கள் எடுத்திருந்தது. எல்கர் 121, ரபாடா 6 ரன்களுடன் 2-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில் ரபாடா 22, மோர்கெல் 4 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். எல்கர் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4, ஹேஸில்வுட், நாதன் லயன் தலா 2, ஸ்டார்க், மார்ஷ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
 பின்னர் ஆடி வரும் ஆஸ்திரேலியாவில் பேன்கிராஃப்ட் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். வார்னர் 30, ஷான் மார்ஷ் 26, நாதன் லயன் 47 ரன்கள் சேர்க்க, எஞ்சிய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தன. தென் ஆப்பிரிக்க தரப்பில் மோர்கெல் 4, ரபாடா 3, பிலாண்டர் 2 விக்கெட் எடுத்தனர்.
 மோர்கெல் 300: இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் முதல் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மோர்கெல், டெஸ்ட் போட்டியில் தனது 300 விக்கெட்டுகளை எட்டினார். இச்சாதனையை செய்யும் 5-ஆவது தென் ஆப்பிரிக்க வீரர் மோர்கெல் ஆவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT