செய்திகள்

டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 294 ரன்கள் முன்னிலை

தினமணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 72 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
 தற்போதைய நிலையில் அந்த அணி, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 294 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அணியின் வசம் 5 விக்கெட்டுகள் உள்ளன. 3-ஆம் நாளான சனிக்கிழமை முடிவில் டி வில்லியர்ஸ் 51, டி காக் 29 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
 கேப் டவுனில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 97.5 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அணியில் டீன் எல்கர் அதிகபட்சமாக 141 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பேட்ரிக் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
 இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா 69.5 ஓவர்களில் 255 ரன்களுக்கு சுருண்டது. பேன்கிராஃப்ட் மட்டும் அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்தார். டிம் பெய்ன் 34 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக் தரப்பில் ரபாடா 4, மோர்ன் மோர்கெல் 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
 பின்னர் முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா தற்போது தனது 2-ஆவது இன்னிங்ஸில் 238 ரன்களுடன் ஆடி வருகிறது. முன்னதாக ஆடியவர்களில் எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 84 ரன்கள் அடித்தார். டீன் எல்கர் 14, ஹஷிம் ஆம்லா 31, கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 20, டெம்பா பவுமா 5 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
 ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 2, ஸ்டார்க், ஹேஸில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
 பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்ட்
 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற பொருள் ஒன்றை பந்தின் மீது தேய்த்ததை கேமராக்கள் படம்பிடித்திருந்தது. இதையடுத்து அவர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 இந்நிலையில், பந்தை சேதப்படுத்தியதை பேன்கிராஃப்ட் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இதுகுறித்து தங்களுக்கு தெரியும் என்று அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT