ஆசிய பாரா போட்டிகள்: 3 தங்கம் உள்பட இந்தியாவுக்கு 11 பதக்கங்கள்
ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியாவுக்கு உலக சாதனையுடன் முதல் தங்கத்தை ஈட்டி எறிதலில் பெற்றுத் தந்தார் சந்தீப் செளத்ரி.
ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியாவுக்கு உலக சாதனையுடன் முதல் தங்கத்தை ஈட்டி எறிதலில் பெற்றுத் தந்தார் சந்தீப் செளத்ரி.
மொத்தம் 3 தங்கம் உள்பட 11 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.
ஆடவர் பிரிவில் திங்கள்கிழமை அவர் 60.01 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இலங்கை வெள்ளியையும், ஈரான் வெண்கலத்தையும் வென்றன.
மாற்றுத்திறனாளியான சந்தீப்புக்கு கை, கால்களில் பாதிப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது.
49 கிலோ பவர்லிப்டிங் பிரிவில் பர்மன் பாஷா வெள்ளியும், பரம்ஜித் கெளர் வெண்கலத்தையும் வென்றனர். மகளிர் 100 மீ. பட்டர்பிளை எஸ் 10 பிரிவில் தேவன்ஷி வெள்ளிப் பதக்கத்தையும், ஆடவர் 200 மீ தனிநபர் மெடலி பிரிவில் சுயாஷ் ஜாதவ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். நீச்சலில் ஆடவர் 50 மீ பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் நாராயணன் தங்கம் வென்றார். அதே நேரத்தில் நீச்சலில் மேலும் 3 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
மகளிர் 1500 மீ பந்தயத்தில் ரக்ஷிதா தங்கம் வென்றார். மகளிர் ஈட்டி எறிதலில் ரம்யா ஷண்முகம், 1500 மீ பந்தயத்தில் ராதா வெங்கடேஷும் வெள்ளி வென்றனர்.
3 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலத்துடன் இந்தியா 8-ஆவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்திலும், கொரியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.