செய்திகள்

துளிகள்...

DIN

* தில்லியில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹாஃப் மாரத்தான் பந்தயத்தில் கென்யாவின் உலகச் சாதனை வீரர் ஜாய்ஸ்சிலின் ஜெப்கோஸ்ஜி, 3 முறை ஒலிம்பிக் சாம்பியன் டிருனேஷ் டைபாபா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 * இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். 42 ஆட்டங்களில் கோலி 4233 ரன்களை குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் அடங்கும். அதே நேரத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 56 ஆட்டங்களில் 4214 ரன்களை (8 சதங்கள் அடங்கும்) குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.
 * மலேசியாவின் ஜோஹோர் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்றது. கடந்த முறை வெண்கலம் வென்றிருந்த இந்தியா தற்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
 * விஜய் ஹஸாரே கோப்பை போட்டியில் ஜார்க்கண்ட் அணி சார்பில் பங்கேற்று விளையாட முடியாது என முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT