செய்திகள்

புரோ கபடி லீக்: தமிழ்த் தலைவாஸ் தோல்வி

DIN


புரோ கபடி லீக் 2018 போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி என்ற புள்ளிக்கணக்கில் தமிழ்த்தலைவாஸ் அணியை வீழ்த்தியது.
சென்னையில் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் முடிந்து, தற்போது ஹரியாணா மாநிலம் சோனிபட்டில் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை ஓய்வு நாளான நிலையில் புதன்கிழமை இரவு பெங்களூரு-தமிழ்த் தலைவாஸ் அணிகள் மோதின. சென்னையில் நடைபெற்ற ஆட்டங்களில் தமிழ்த் தலைவாஸ் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் இங்கு வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் ஆட்டம் பெங்களூரு அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதல் பாதி நிறைவில் 25-14 என அந்த அணி முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதியிலும் பெங்களூரு அணியின் கையே ஓங்கி இருந்தது. இறுதியில் 44-35 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணி வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT