செய்திகள்

2019-இல் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்: ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டம்?

DIN

பாகிஸ்தானுடன் வரும் 2019-இல் ஐக்கிய அரபு நாடுகளில் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இரு நாடுகளிடையே நிலவும் பகைமையால் கிரிக்கெட் உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் பரஸ்பரம் நடத்தப்படாமல் பல ஆண்டுகளாக இந்த சிக்கல் நீடித்து வருகிறது.
மேலும் கடந்த 2014, 2015-இல் பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.500 கோடிக்கு இழப்பீடு) வழங்க வேண்டும் என பிசிசிஐயிடம் கோரியுள்ளது.
மேலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பயங்கரவாத சம்பவங்கள் எதிரொலியாக அது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ வட்டாரங்கள் கூறிதாவது-
பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி துபை ஆசிய கோப்பை போட்டியின் இடையே பிசிபி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். மேலும் இதுதொடர்பாக வினோத் ராய் தலைமையிலான சிஓஏ குழுவிடமும் எடுத்துக் கூறுவார் எனத் தெரிவித்தன.
பிசிபி வட்டாரங்களும் இந்த முன்னேறத்தை வரவேற்றுள்ளன. பிசிசிஐ தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. அடுத்த கட்டத்துக்கு இரு நாட்டு அணிகளின் ஆட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். எந்த தனிநபர், அரசியல்வாதிகளைக் காட்டிலும் கிரிக்கெட்டே பெரிது எனத் தெரிவித்தன.
வரும் அக்டோபர் 1-ஆம் தேதி பாகிஸ்தான் இழப்பீடு கோரிய வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT