செய்திகள்

வேறு அணியாக இருந்திருந்தால் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது

DIN

வேறு அணியாக இருந்திருந்தால் என்னுடைய செயல்பாட்டால் எப்போதோ அணியை விட்டு ஓரம் கட்டியிருப்பார்கள் என்று சிஎஸ்கே அணியின் ஷேன் வாட்சன் தெரிவித்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஷேன் வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தில் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார் வாட்சன். இதில், 9 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை ஒரு அரை சதம் கூட வாட்சன் பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் முடிவடைந்த பிறகு வாட்சன் கூறியதாவது:
வேறு ஒரு அணியாக இருந்திருந்தால் நான் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படாமல் போனதற்காக என்னை வெளியேற்றி இருப்பார்கள். ஆனால், தோனியும், ஸ்டீபன் பிளமிங்கும் என் மீது முழு நம்பிக்கை வைத்தனர் என்றார் வாட்சன்.
ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்தார். அவர் குறித்து வாட்சன் கூறுகையில், "கடந்த 12 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் வார்னர் விளையாடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது. ஆனால், அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. சர்வதேச அளவில் அவர் மிகச் சிறந்த வீரராவார்' என்றார் வாட்சன். ஹைதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், வாட்சனின் அதிரடி ஆட்டத்தை பாராட்டினார்.
"வாட்சன் சிறந்த ஆட்டக்காரர் என்பதை அறிவோம். அதனால், அவரை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும் என்று கருதினோம். அவர் 5 முதல் 6 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்து விட்டால் ஆட்டமிழக்கச் செய்வது மிகவும் கடினமாகும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT