செய்திகள்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் - பிரண்டன் மெக்கல்லம்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர்...

எழில்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜாக் காலிஸும் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சைமன் கடிச்சும் சமீபத்தில் விலகினார்கள். இந்நிலையில் கேகேஆர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக 37 வயது பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். மெக்கல்லம், கேகேஆர் அணிக்காக 5 வருடங்கள் விளையாடியுள்ளார். 2009-ல் கேப்டனாகவும் இருந்துள்ளார். சமீபத்தில், அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மெக்கல்லம்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றியடைந்தது கேகேஆர். பிறகு தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. பிறகு அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் வென்றது. எனினும் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றுப்போனதால் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடம் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போய்விட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT