செய்திகள்

கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை நாளை முறியடிப்பாரா ரோஹித் சர்மா!

டி20 கிரிக்கெட்டில் 52 இன்னிங்ஸில் 103 சிக்ஸர் அடித்துள்ளார் கெயில்...

எழில்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில். டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்கல்லம் 107 சிக்ஸருடன் முதல் இடத்திலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அஃப்ரிடி 351 சிக்ஸருடன் முதல் இடத்திலும் டி20 கிரிக்கெட்டில் 103 சிக்ஸருடன் கெயில் முதல் இடத்திலும் உள்ளார்கள் (கப்திலும் 103 சிக்ஸர் அடித்துள்ளார்).

டி20 கிரிக்கெட்டில் 52 இன்னிங்ஸில் 103 சிக்ஸர் அடித்துள்ளார் கெயில். மேலும் கெய்ல் மற்றும் கப்திலின் 103 சிக்ஸர்களுக்கு அடுத்ததாக ரோஹித் சர்மா 102 சிக்ஸருடன் (85 இன்னிங்ஸ்) உள்ளார். இதையடுத்து இன்னும் 2 சிக்ஸர் அடித்தால் அதிக சிக்ஸர் அடித்த டி20 வீரர் என்கிற பெருமையை அவர் அடைவார். 

விசாகப்பட்டினத்தில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா உலக சாதனை படைப்பாரா என்கிற ஆர்வம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்

Dinamani வார ராசிபலன்! | Sep 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தேர்தலுக்கு முன்பே செமஸ்டர் தேர்வா? உயர்கல்வி அமைச்சர் விளக்கம்

செபி அறிவிப்பு எதிரொலி: உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!

நடிகா் ரோபோ சங்கா் மறைவு: தலைவர்கள் இரங்கல்

SCROLL FOR NEXT