செய்திகள்

7-க்கு புது இலக்கணம் வகுத்து தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சேவாக்!

தோனி வாழ்த்து தெரிவித்து சேவாக் பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

Raghavendran

வீரேந்தர் சேவாக் தனது அதிரடி பேட்டிங் போன்று அதிரடி ட்வீட்களுக்காகவும் பிரபலமானவர். அவ்வகையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அவர் கூறிய பிறந்தநாள் வாழ்த்து சமூக வலைதளங்களில் வைரலானது.

தோனி தனது 38-ஆவது பிறந்தநாளை ஜூலை 7, 2019 அன்று கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் உலகிலும், மேலும் பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் தோனி, தனது மனைவி, மகள் மற்றும் நண்பர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்களுடன் 38-ஆவது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்.

இந்நிலையில், தோனி வாழ்த்து தெரிவித்து சேவாக் பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில் 7-க்கு புது இலக்கணம் வகுக்கும் விதமாக சேவாக் பதிவிட்ட ட்வீட் பின்வருமாறு:

உலகில் 7 கண்டங்கள்
வாரத்தில் 7 நாட்கள்
வானவில்லில் 7 நிறங்கள்
இசையில் 7 ஸ்வரங்கள்
மனித உடலில் 7 சக்கரங்கள்
திருமணத்தில் அக்னி குண்டத்தைச் சுற்றி 7 சுற்றுகள்
உலகின் 7 அதிசயங்கள்

இவற்றையெல்லாம் விட...

7-ஆவது மாதத்தில் 7-ஆம் நாளில் கிரிக்கெட் உலகின் அதிசயத்தின் பிறந்ததினம்

பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி, கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமகவில் போட்டி பொதுக்குழு: ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

இணையவழி சூதாட்டம்: மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரம்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT