செய்திகள்

கௌன்டி டி20-யில் டி வில்லியர்ஸ் அதிரடி

ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கௌன்டி டி20 ஆட்டம் ஒன்றில் அரைசதம் விளாசினார்.

Raghavendran

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கௌன்டி டி20 ஆட்டம் ஒன்றில் அரைசதம் விளாசினார்.

முன்னதாக முதல் பேட்டிங் செய்த எஸக்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்து. நெதர்லாந்து வீரர் ரையன் டென் டோஷே ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்தார்.

பின்னர் களமிறங்கிய மிடில்செக்ஸ் அணி 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் உடன் ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ், ஆட்டமிழக்காமல் 6 இமாலய சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உட்பட 43 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார்.

இவர்கள் இருவரும் இணைந்து 3-ஆவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். இதனால் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

மிடில்செக்ஸ் அணிக்காக முதல் 7 லீக் ஆட்டங்களில் பங்கேற்க ஏபி டி வில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை அந்த அணி நாக்-அவுட் சுற்றுகளுக்கு தகுதிபெறும் பட்சத்தில் மீண்டும் அந்த அணிக்காக விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT