செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள்: கோலிக்கு 9-வது இடம்

DIN



இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார். 

இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 நபர்கள் பட்டியலை டைம்ஸ் நௌவில் வெளியான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த டாப் 100 நபர்கள் விளையாட்டு, பிரபலம், உணவு, விளையாட்டு, பயணம் என பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

இதில், அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் போர்ச்சுகல் நாட்டு நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தில் உள்ளார். அவரை 17.28 கோடி மக்கள் இன்ஸ்டாகிராமில் பின்பற்றுகின்றனர். ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அவர் 9,75,000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கிறார். ஒட்டுமொத்த டாப் 100 நபர்கள் பட்டியலில் ரொனால்டோ 3-வது இடத்தில் உள்ளார். 

இவருக்கு அடுத்தபடியாக பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர் 2-வது இடத்தில் உள்ளார். இவரை 12.14 கோடி மக்கள் பின்பற்றுகின்றனர். ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் நெய்மர் 7,22,000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கிறார். 

மூன்றாவதாக, ஆர்ஜென்டினா நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி இருக்கிறார். இவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 12.35 கோடி ஆகும். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 6,48,000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கிறார்.

இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார். கோலியை 3.62 கோடி மக்கள் இன்ஸ்டாகிராமில் பின்பற்றுகின்றனர். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 1,96,000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கிறார். ஒட்டுமொத்த டாப் 100 வரிசையில் கோலி 23-வது இடத்தில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT