செய்திகள்

யூரோ 2020 தகுதிச்சுற்று: ஸ்பெயின், அயர்லாந்து வெற்றி

DIN


யூரோ 2020 கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்டவை தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) சார்பில் நடத்தப்படும் பெரிய போட்டியான யூரோ கடந்த 2016-இல் நடைபெற்ற போது, போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் வரும் 2020-இல் யூரோ போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன.
மாட்ரிடில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற குரூப் எப் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயின்-ஸ்வீடன்அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தினர்.
குரூப் டி பிரிவு ஆட்டத்தில் அயர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை வீழ்த்தினர். வார்ஸாவில் நடைபெற்ற குரூப் ஜி பிரிவு ஆட்டத்தில் போலந்து 4-0 என இஸ்ரேலை வென்றது. செக். குடியரசு 3-0 என மான்டிநீக்ரோவை தோல்வியுறச் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT