செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு ஆறுதலளித்த தாஹிர்: உலகக் கோப்பையில் புது சாதனை!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு இம்ரான் தாஹிரின் சாதனை சற்று ஆறுதலை அளித்துள்ளது.

Raghavendran

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தகுதிச் சுற்றுடன் வெளியேறும் சூழலில் உள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு இம்ரான் தாஹிரின் சாதனை சற்று ஆறுதலை அளித்துள்ளது.

நடப்பு தொடரின் மூத்த வயதுடைய (40) வீரரான தாஹிர், உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட்டுகளை (39) வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். மேலும் சில லீக் ஆட்டங்கள் மீதமிருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள தாஹிர், இதுவரை 3 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தனது 100-ஆவது ஒருநாள் போட்டியை நிறைவு செய்தார். 

இந்த உலகக் கோப்பையில் முதல் பந்தை வீசியவர், முதல் விக்கெட்டை வீழ்த்தியவர், அதிலும் உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் பந்தை வீசிய சுழற்பந்துவீச்சாளர் உள்ளிட்ட பெருமைகளும் இம்ரான் தாஹிரையே சேரும்.

முன்னதாக வைட் லைட்னிங் (மின்னல்) என்று அழைக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட், உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை (38) வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளராக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

SCROLL FOR NEXT