செய்திகள்

சிஆர்பிஎப் மற்றும் முப்படைகளுக்கு ரூ.20 கோடி நிதி: பிசிசிஐ வழங்கியது

DIN

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக ஐபிஎல் 2019 தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஆகும் செலவு ரூ.20 கோடியை சிஆர்பிஎப் மற்றும் முப்படைகளுக்கு நல நிதியாக பிசிசிஐ வழங்கியது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும், இரங்கலும் தெரிவித்தனர்.
இதற்கிடையே புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐபிஎல் 2019 தொடக்க விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். அதற்கு செலவிடப்படும் தொகை நிவாரண நிதியாக தரப்படும் என பிசிசிஐ சிஓஏ வினோத் ராய் தெரிவித்திருந்தார். 
அதற்கு முன்பு பிசிசிஐ சார்பில் ரூ.20 கோடி நிதி சிஆர்பிஎப் மற்றும் முப்படைகளுக்கு வழங்கப்பட்டது. இதில் ரூ.11 கோடி ராணுவத்துக்கும், ரூ.7 கோடி சிஆர்பிஎப்புக்கும், கடற்படை, விமானப்படைக்கு தலா ரூ.1 கோடியும் நிதியுதவி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT