செய்திகள்

ஐபிஎல்: ரன் அவுட் செய்ய விடாமல் தடுத்த 2ஆவது வீரர் அமித் மிஸ்ரா

DIN


ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில், எதிரணி வீரரை அவுட் செய்ய விடாமல் ஸ்டம்பை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 2ஆவது வீரர் என்ற பெயரை எடுத்துள்ளார் தில்லி அணியின் வீரர் அமித் மிஸ்ரா.
தில்லி, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி அணி வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தில் 2ஆவதாக விளையாடிய தில்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.
19.4ஆவது ஓவரில் ரன் எடுக்க ஓடியபோது பந்துவீச்சாளரை ரன் அவுட் செய்ய விடாமல் ஸ்டம்பை மறைத்தபடி அமித் மிஸ்ரா  ஓடியது தெரியவந்தது.
இதையடுத்து, ஹைதராபாத் அணியின் கோரிக்கையை ஏற்று அவர் ஆட்டமிழந்ததாக மூன்றாவது நடுவர் அறிவித்தார்.
2013 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், புணே வாரியர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தின்போது, யூசஃப் பதான் இவ்வாறு ஆட்டமிழந்த முதல் ஐபிஎல் வீரர் என்ற பெயரை எடுத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT