செய்திகள்

டி20: இலக்கை விரட்டுவதில் இந்திய அணி புதிய சாதனை!

டி20 ஆட்டங்களில் வெற்றிகரமாக அதிக முறை இலக்கை விரட்டியதில் புதிய சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

எழில்

டி20 ஆட்டங்களில் வெற்றிகரமாக அதிக முறை இலக்கை விரட்டியதில் புதிய சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

ராஜ்கோட்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி 85 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய வங்கதேசம் 153/6 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 154/2 ரன்களை எடுத்து வென்றது. 

இது, டி20 ஆட்டத்தில் இலக்கை விரட்டும்போது இந்திய அணி பெற்ற 41-அது வெற்றியாகும். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி டி20 ஆட்டத்தில் இலக்கை விரட்டிய போது பெற்ற 40 வெற்றிகளைத் தாண்டியுள்ளது இந்திய அணி. 

டி20: இலக்கை விரட்டியபோது அதிக வெற்றிகள்
 
41 இந்தியா  (61 ஆட்டங்கள்)
40  ஆஸ்திரேலியா (69)
36 பாகிஸ்தான் (67)
28 தென் ஆப்பிரிக்கா (48)
28 இங்கிலாந்து (59)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

SCROLL FOR NEXT