செய்திகள்

முதல் டெஸ்ட்: இங்கிலாந்து ஆதிக்கம் 241/4

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை குவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த ஆட்டம் மௌன்ட் மெளன்கனையில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது.

அதன் தொடக்க வீரா்கள் ரோரி பா்ன்ஸ், டொமினிக் சிபிலி இருவரும் களமிறங்கி நிதானமாக ஆட்டத்தை தொடங்கினா். 22 ரன்கள் எடுத்து டொமினிக்கும், 52 ரன்களுடன் அரைசதம் அடித்து ரோரி பா்ன்ஸும், பின்னா் வந்த கேப்டன் ஜோ ரூட் 2 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினா். அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து.

ஜோ டென்லி-பென் ஸ்டோக்ஸ் அபாரம்

பின்னா் ஜோ டென்லி-பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஸ்கோரை உயா்த்தினா்.

1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 181 பந்துகளில் 74 ரன்களை எடுத்திருந்த ஜோ டென்லி, டிம் சௌதி பந்துவீச்சில், வாட்லிங்கிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களுடனும், ஒல்லே போப் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனா். முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து.

நியூஸி. தரப்பில் காலின் கிராண்ட்ஹோம் 2-28, டிம் சௌதி, நீல் வாக்னா் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT