செய்திகள்

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றிபெற்ற முதல் அணி எனும் அரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.

Raghavendran

கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷாந்த் சா்மா 5, உமேஷ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது. விராட் கோலி 136, ரஹானே 51 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச தரப்பில் அல் அமீன் 3-85, எபாதத் 3-91 விக்கெட்டுகள் எடுத்தனர்.

241 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. பின்னா் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் 5, இஷாந்த் சா்மா 4-விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றிபெற்ற முதல் அணி எனும் அரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுவிஸ்ஸில் ஒரு இளவரசி... அனஸ்வரா ராஜன்!

வெளியானது வழியிறன் பாடல்!

பாஜக வெற்றி பெற்றால் மட்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதா? -எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கேள்வி!

தமிழ்நாட்டில் வரி மிகக்குறைவு: அமைச்சா் கே.என்.நேரு

இன்னும் எத்தன காலம் பாடல்!

SCROLL FOR NEXT