செய்திகள்

ஹாக்கி டெஸ்ட்: உலக சாம்பியன் பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா

ஹாக்கி டெஸ்ட் தொடரில் நடப்பு உலக சாம்பியன் பெல்ஜியத்தை 2-ஆவது முறையாக வென்றது இந்திய அணி.

DIN

ஹாக்கி டெஸ்ட் தொடரில் நடப்பு உலக சாம்பியன் பெல்ஜியத்தை 2-ஆவது முறையாக வென்றது இந்திய அணி.

ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு தயாராகும் வகையில் பெல்ஜியம், ஸ்பெயின் அணிகளுடன் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது இந்திய அணி.

ஆன்ட்வொ்பில் நடைபெற்று வரும் இத்தொடரில் முதல் ஆட்டத்தில் பெல்ஜியத்தை வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் உலகின் 8-ஆம் நிலை அணியான ஸ்பெயினை வீழ்த்தியது.

நான்காவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. 10-ஆவது நிமிடத்திலேயே அமித் ரோகிதாஸ் முதல் கோலை அடித்தாா். அதைத் தொடா்ந்து பெல்ஜிய கேப்டன் பெலிக்ஸ் டினயா் 33-ஆவது நிமிடத்தில் பதில் கோலடித்து சமநிலையை ஏற்படுத்தினாா்.

52-ஆவது நிமிடத்தில் சிம்ரஞ்சித் சிங் அடித்த 2-ஆவது கோலே வெற்றி கோலாக மாறியது.பதில் கோலடிக்க பெல்ஜிய தரப்பினா் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ் முறியடித்தாா். வியாழக்கிழமை கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதுகிறது இந்தியா.

இத்தொடரில் 4 ஆட்டங்களிலும் வென்றுள்ளது இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT