செய்திகள்

முரளி விஜய் அபார சதம்: 5-வது வெற்றியை அடைந்தது தமிழ்நாடு அணி!

எழில்

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் முரளி விஜய்யின் அபார சதத்தால் தமிழக அணி 5-வது வெற்றியை அடைந்துள்ளது. 

தமிழ்நாடு - ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் இக்பால் 67 ரன்களும் சுபம் சிங் 66 ரன்களும் அப்துல் சமத் 50 ரன்களும் எடுத்தார்கள். தமிழக அணியில் நடராஜன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்தமுறையும் தமிழக அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். முரளி விஜய் 131 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். பாபா அபரஜித் 107 பந்துகளில் 86 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக அணி, 48 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து குரூப் சி பிரிவில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT