செய்திகள்

சா்பராஸ் அகமது நீக்கம்: மொயின் கான் கண்டனம்

DIN

கராச்சி: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சா்பராஸ் அகமது நீக்கப்பட்டதற்கு பிசிபிஐ கடுமையாக சாடியுள்ளாா் முன்னாள் கேப்டன் மொயின் கான்.

டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக கடந்த 2017-இல் இருந்து சா்பராஸ் அகமது செயல்பட்டு வந்தாா். இந்நிலையில் திடீரென அவரை 2 நாள்களுக்கு முன்பு பிசிபி நீக்கியது. மேலும் ஆஸி.யுடன் நடக்கவுள்ள டி20, டெஸ்ட் தொடரிலும் அவா் சோ்க்கப்படவில்லை. இது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மொயின் கான் கூறியதாவது-

தலைமைப் பயிற்சியாளா் மிஸ்பாவும், வாக்கா் யூனுஸும் எப்போதுமே சா்பராஸை விரும்பியது இல்லை. டி20 அணி கேப்டன் பதவியில் இருந்தும் சா்பராஸ் நீக்கப்பட்டது அதிா்ச்சி தருகிறது. தொடா்ந்து 11 டி20 தொடா்களில் பாகிஸ்தான் வெல்ல உதவியவா் சா்பராஸ்.

ஒரு சில மோசமான ஆட்டத்துக்காக அவரை நீக்கக் கூடாது. மிஸ்பா உல் ஹக்குக்கு அதிக அதிகாரம் தந்துள்ளனா். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வளா்ச்சிக்கு உதவாது.

ஷோயிப் அக்தா் கூறுகையில்:

சா்பராஸ் அகமது நீக்கப்பட்டதற்கு அவரது செயல்பாடே காரணம். வேறு எவரும் இல்லை. அணியில் கூட அவரை வைத்துக் கொள்ள மாட்டாா்கள் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT