செய்திகள்

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20: இறுதியில் லேடி ஆண்டாள்-வித்யா மந்திர்

DIN

பள்ளிகள் இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 போட்டி இறுதிச் சுற்றில் லேடி ஆண்டாள்-வித்யா மந்திர் பள்ளிகள் மோதுகின்றன.
 சென்னையில் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. முதல் அரையிறுதியில் திருச்சி செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியும்-லேடி ஆண்டாள் வெங்கட்ட சுப்பாராவ் பள்ளிகள் மோதின.
 செயின்ட் பீட்ஸ் அணி 20 ஓவர்களில் 146/6 ரன்களை எடுத்தது. (மிதுல் ராஜ் 30, ஸ்ரீஅபிஷேக் 41), அஹுஜா 2-24.
 பின்னர் ஆடிய லேடி ஆண்டாள் பள்ளி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. (அனிருத் சேஷாத்ரி 53, ரிஷி 42, வைத்தியநாதன் 35). இரண்டாவது அரையிறுதியில் டான்பாஸ்கோ அணியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது வித்யா மந்திர்.
 முதலில் ஆடிய டான்பாஸ்கோ 135/5 ரன்களை எடுத்தது. (அஜய்குமார் 48, ஆதிஷ் 27), பரத் சீனிவாஸ் 2-19. பின்னர் ஆடிய வித்யா மந்திர் பள்ளி 19.5 ஓவர்களில் 139/7 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. (ராம்நாத் 63, விஜய் பிரியதர்ஷன் 27).
 இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT