செய்திகள்

தோனி குறித்த அந்த ட்வீட், எனக்கொரு பாடம்: விராட் கோலி ஒப்புதல்!

வீட்டில் அமர்ந்துகொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டேன். அது செய்தியாகிவிட்டது...

எழில்

இரு நாள்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டமொன்றில் தோனியுடன் எடுத்த புகைப்படத்தை ட்வீட் செய்தார் விராட் கோலி. இந்த ஆட்டத்தை என்னால் மறக்கமுடியாது. விசேஷமான இரவு. இவர் (தோனி), உடற்தகுதிக்கான சோதனை போல என்னை ஓடவைத்தார் என்று ட்வீட் செய்தார் கோலி. 

இந்த ஒரு ட்வீட், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தோனி ஓய்வு பெறப்போகிறார். அதனால்தான் புகழுரையாக இந்த ட்வீட்டை கோலி வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கருதினார்கள்.

அந்த ட்வீட் குறித்து விராட் கோலி கூறியுள்ளதாவது: 

அந்த ட்வீட்டை எந்தக் காரணத்துக்காகவும் வெளியிடவில்லை. வீட்டில் அமர்ந்துகொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டேன். அது செய்தியாகிவிட்டது. எனக்கு இது ஒரு பாடம் என நினைக்கிறேன். நான் எண்ணுவது போல உலகமும் எண்ணாது என்பதைக் கற்றுக்கொண்டேன். அந்தப் படம், ஓய்வுக்கான புகழுரையாக இருக்கும் எனக் கனவிலும் எண்ணவில்லை. என்னுடைய மற்ற ஆட்டங்கள் போல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டி20 ஆட்டம் குறித்து நான் அதிகம் பேசியதில்லை. அந்த ஆட்டத்தை நான் இன்றும் நினைவில் வைத்துள்ளேன். அதைப் பற்றி பேசியதில்லை என்பதால் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டேன். ஆனால் மக்கள் அதை வேறு மாதிரி புரிந்துகொண்டுவிட்டார்கள். அதில் துளியும் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

புகையிலா போகி: திருவள்ளூா் ஆட்சியா் வேண்டுகோள்

திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாளை பொங்கல் விழா

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT