செய்திகள்

பள்ளிச் சிறுவர்களுக்கு அடிப்படை கால்பந்து பயிற்சி: ஜெர்மன் கால்பந்து அணி டார்ட்மண்ட் திட்டம்

DIN


ஜெர்மனியின் முன்னணி கால்பந்து கிளப் அணியான போருஷ்யா டார்ட்மண்ட் தமிழகத்தில் பள்ளிச் சிறுவர்களுக்கு அடிப்படை கால்பந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
பண்டஸ்லீகா போட்டி சாம்பியன் அணியான டார்ட்மண்ட் மற்றும் வேர்ல்ட் 1 ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. 
இதுதொடர்பாக ஆசிய-பசிபிக் பிராந்திய டார்ட்மண்ட் அணி மேலாண்மை இயக்குநர் சுரேஷ் லட்சுமணன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சென்னை நகரில் 22 பள்ளிகள் மற்றும் தமிழகம் முழுவதும் 23 பள்ளிகள் என மொத்தம் 45 பள்ளிகளைச் சேர்ந்த 8 முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அடிப்படை கால்பந்து பயிற்சி இலவசமாக தரப்படும்.
எங்கள் கிளப்பின் பயிற்சியாளர்கள், இந்திய பயிற்சியாளர்களுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் தற்போதைய கால்பந்து ஆட்டமுறைகள் தொடர்பாக பயிற்சி அளிப்பர். இதன் பின் சிறுவர்களுக்கு தீவிர பயிற்சி தரப்படும். யூத் கால்பந்து லீக் போட்டிகளும் நடத்தப்பட்டு சிறந்த வீரர்களும் அடையாளம் காணப்படுவர். ஆசிய அளவில் எங்கள் அணியின் முதல் முயற்சி இதுவாகும் என்றார்.
வேர்ல்ட் 1 நிறுவன சிஓஓ விக்ரம் ராஜ்குமார் கூறியதாவது: ஏற்கெனவே மிúஸாரம், மணிப்பூரில் கால்பந்து வளர்ச்சித் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது தமிழகத்திலும் டார்ட்மண்ட் அணியுடன் இணைந்து செயல்படுத்துகிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT