செய்திகள்

பான் பசிபிக் ஓபன்: காலிறுதியில் ஒஸாகா

பான் பசிபிக் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீராங்கனை நவோமி ஒஸாகா தகுதி பெற்றுள்ளார்.

DIN


பான் பசிபிக் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீராங்கனை நவோமி ஒஸாகா தகுதி பெற்றுள்ளார்.
2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஒஸாகா, கடந்த வாரம் நடைபெற்ற யுஎஸ் ஓபன் போட்டியில் ரவுண்ட் 16 சுற்றோடு வெளியேறினார். இதற்கிடையே டோக்கியோவில் நடைபெறும் பான் பசிபிக் போட்டியில் பங்கேற்ற அவர் இரண்டாவது சுற்றில் பல்கேரியாவின் விக்டோரியா டோமவோவை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஜெர்மனியின் கெர்பர் 6-2, 6-4 என நிக்கோல் கிப்ஸை வீழ்த்தினார். மடிஸன் கீய்ஸ் 5-7, 6-0, 6-4 என கஜகஸ்தானின் ஜரீனாவை வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT