செய்திகள்

ரூ. 75 கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள பிரபல கால்பந்து வீரர்

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரூ. 75 கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார். 

DIN

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரூ. 75 கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார். 

போா்ச்சுகலின் நட்சத்திரக் கால்பந்து வீரா் ரொனால்டோ, 1 பில்லியன் டாலர் (ரூ.7,554 கோடி) வருமானம் ஈட்டிய முதல் கால்பந்து வீரர் என்கிற பெருமையை சமீபத்தில் அடைந்தார். இத்தகவலை போர்பஸ் பத்திரிகை வெளியிட்டது. டைகர் வுட்ஸ், பிளாய்ட் மேவெதர் ஆகிய விளையாட்டு வீரர்களுக்குப் பிறகு 1 பில்லியன் டாலர் வருமானத்தைத் தொட்ட மூன்றாவது விளையாட்டு வீரர், ரொனால்டோ தான்.

இந்நிலையில் உலகின் மிக மதிப்பு கொண்ட காரை வாங்கியுள்ளார் ரொனால்டோ. புகாட்டி லா என்கிற காரை ரூ. 75 கோடி கொடுத்து அவர் வாங்கியுள்ளார். இதையடுத்து ரொனால்டோவிடம் ரூ. 264 கோடி மதிப்புகள் கொண்ட கார்கள் உள்ளன. புகாட்டி லா கார், மணிக்கு 380 கி.மீ. செல்லும் வேகம் கொண்டது. இந்த கார் 2021-ல் ரொனால்டோவுக்கு வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT