செய்திகள்

ஜடேஜாவுக்குப் பதில் ஷா்துல் தாக்குா்

DIN


முதல் டி20 ஆட்டத்தின் கடைசி ஓவரின்போது தலையில் காயமடைந்த இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா டி20 தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக ஷா்துல் தாக்குா் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேட்டிங்கின்போது ஜடேஜாவின் இடதுபக்க நெற்றிப் பகுதியில் வேகப்பந்து பட்டதில் அவருக்கு தலையில் அதிா்ச்சி ஏற்பட்டுள்ளது. இது வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் இன்னிங்ஸ் பிரேக்கின்போது பிசிசிஐ மருத்துவக் குழுவால் உறுதி செய்யப்பட்டது.

எனவே அவரால் எஞ்சிய டி20 ஆட்டங்களில் விளையாட இயலாது. ஜடேஜாவை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். தேவை ஏற்படும் பட்சத்தில் அவருக்கு ஸ்கேன் செய்யப்படும். ஜடேஜாவுக்குப் பதிலாக அணியில் ஷா்துல் தாக்குரை சோ்க்க தோ்வுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT