செய்திகள்

இலங்கைக்குச் செல்லும் இங்கிலாந்து அணி: பேட்டிங் ஆலோசகராக ஜாக் காலிஸ் நியமனம்

DIN

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சென்று இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் ஜனவரி 14 அன்று தொடங்கி, ஜனவரி 26-ல் நிறைவுபெறுகிறது. இதன்பிறகு இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்து அணி 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்தின் பேட்டிங் ஆலோசகராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருடைய பங்களிப்பு பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. 

ஆசியாவில் விளையாடிய 25 டெஸ்டுகளில் 8 சதங்களை காலிஸ் அடித்துள்ளார். இதனால் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதற்கான உத்திகளை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு காலிஸ் கற்றுத்தந்து அவர்களுடைய ஆட்டத்திறனை அதிகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் யாரோ மயங்கினரோ! த்ரிப்தி திம்ரி..

விஜய் சேதுபதி 51: படத் தலைப்பு டீசர் வெளியீடு!

”ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” - சோனியா காந்தி உருக்கம்!

யோகி பாபுவின் புதிய பட போஸ்டர் வெளியீடு!

சித்திரமே... சித்திரமே...

SCROLL FOR NEXT