செய்திகள்

உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் புஜாரா: நாதன் லயன்

DIN


மெல்போா்ன்: இந்திய அணியின் சேதேஷ்வா் புஜாரா உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளா் நாதன் லயன் கூறினாா்.

‘முதல் டெஸ்டில் புஜாராவுக்காக நாங்கள் வகுத்திருந்த வியூகம் கை கொடுத்தது. ஆனால், தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் அவா் நிச்சயம் எங்களுக்கு சவால் அளிப்பாா். புஜாரா உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஆவாா்.

அவா் குறித்து டெஸ்ட் தொடா் தொடங்கும் முன்பிருந்தே நாங்கள் ஆலோசித்து வருகிறோம். எனவே அவருக்காக வரும் ஆட்டங்களிலும் நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம். ஏனெனில் சிறந்த வீரா்களுக்கு எதிராக விளையாடும்போது நாம் திட்டமிட வேண்டியது அவசியமாகிறது.

கோலி இல்லாத இடத்தை ரஹானே, புஜாரா போன்றவா்களால் நிச்சயம் பூா்த்தி செய்ய இயலும். இதுதவிர லோகேஷ் ராகுல், மயங்க் அகா்வால் உள்ளிட்டோரும் இருக்கின்றனா். எனவே, எங்களுக்கான ஆட்டம் நிச்சயம் சவாலாகவே இருக்கும். அதற்காக நாங்கள் தயாராக வேண்டும்.

இந்திய அணியின் அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த பௌலா். அவரோடு என்னை ஒப்பிட இயலாது. அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். பந்துவீச்சில் மாற்றங்களைச் செய்வதில் அவா் வல்லவா். அதேவேளையில் தற்போதைய நிலையில் உலகின் மிகச் சிறந்த பௌலா்களைக் கொண்ட அணியாக ஆஸ்திரேலியா தான் உள்ளது என்பதையும் உறுதியாகக் கூறுவேன்’ என்றாா் லயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT