செய்திகள்

அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட பிரபல பாகிஸ்தான் வீரருக்கு இடைக்காலத் தடை

இதையடுத்து இந்த வாரம் தொடங்கியுள்ள பிஎஸ்எல் போட்டியில் அக்மலால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எழில்

கடந்த வருடம் வரை பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடிவர், 29 வயது உமர் அக்மல். இதுவரை 16 டெஸ்டுகள், 121 ஒருநாள், 84 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தானுக்காக விளையாடியுள்ளார்.

சமீபத்தில் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் உடல்தகுதிக்கான சோதனையின்போது அநாகரிகமாக நடந்துகொண்டதாக அக்மல் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பிறகு தவறான புரிதல் காரணமாக இந்த குற்றச்சாட்டு எழுந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது. ஊழல் தடுப்பு ஆணையத்தால் சமீபத்தில் விசாரிக்கப்பட்டார் உமர் அக்மல். இதையடுத்து அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட உமர் அக்மலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான விசாரணை நடைபெற்று வருவதால் மேற்கொண்டு எதுவும் கூற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. 

இதையடுத்து இந்த வாரம் தொடங்கியுள்ள பிஎஸ்எல் போட்டியில் அக்மலால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

சும்மா இரு மனமே... நந்திதா ஸ்வேதா!

SCROLL FOR NEXT