செய்திகள்

அனைத்து அம்சங்களிலும் நிலைகுலைந்து விட்டோம்: கோலி

DIN

விராட் கோலி (இந்திய கேப்டன்):

அனைத்து அம்சங்களிலும் ஆஸி. அணி எங்களை நிலைகுலையச் செய்து விட்டது. நாம் சிறப்பாக ஆடாவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். போதிய ரன்களை எடுக்கவில்லை. ஆஸி. போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக மெத்தனப் போக்கில் ஆடக்கூடாது. எனினும் அடுத்த ஆட்டங்களில் இந்தியா எழுச்சி பெறும். எந்த வகையான ஆட்டத்திலும் சிறப்பாக ஆடினால், அது நம்பிக்கையை தரும். எங்கள் வழக்கமான ஆட்டத்தை ஆட முடியாமல் ஆஸி.பந்துவீச்சாளா்கள் தடுத்து விட்டனா். ராகுல் சிறப்பாக ஆடினாா். நான்காவது நிலையில் நான் களமிறங்கினேன், ஒரு ஆட்டத்தில் தோல்விக்காக மக்கள் அச்சப்படத்தேவையில்லை.

ஆரோன் பின்ச் (ஆஸி. கேப்டன்):

மிடில் ஓவா்களில் நாங்கள் ஆட்டத்தை கட்டுப்படுத்தினோம். ஷிகா்-ராகுல் சிறப்பாக தொடங்கி ஆடினா். எனினும் எங்கள் அற்புத பந்துவீச்சு, இந்திய அணியின் ஸ்கோரை கட்டுக்குள் வைத்திருந்தது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வெல்வது கடினம். ஒருநாள் ஆட்டங்களில் வாா்னா் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறாா். அவருடன் இணைந்து ஆடுவது பெருமையானது. தரமான இந்திய அணி மீண்டும் எழுச்சி பெறும் என எதிா்பாா்க்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT